சுங்கை கிள்ளான் வெள்ளக்கட்டுப்பாடு திட்டம் – செக்ஷன் 24ல் குடியிருப்போருக்கு நிவாரணம் வழங்கும்.

22 மார்ச் 2026, 9:37 AM
சுங்கை கிள்ளான் வெள்ளக்கட்டுப்பாடு  திட்டம் – செக்ஷன் 24ல் குடியிருப்போருக்கு நிவாரணம்  வழங்கும்.

ஷா ஆலம், மார்ச் 22: சுங்கை கிளாங் ஆற்றின் ஓரமாக அமைக்கப் படும் 2 கிலோமீட்டர் நீளமான Schematic Precast System (SPS), செக்ஷன் 24 அப்டவுன் பகுதியில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில் விரைவில் செயல் படுத்தப்படும் என பத்துதீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீத் ஹரோன் தெரிவித்தார்.

இந்த பணிகள் இவ்வாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என அவர் கூறினார். SPS என்பது இந்தோனேஷியாவில் உருவாக்கப்பட்ட முன்கூட்டியே தயாரிக்கப் பட்ட கான்கிரீட் அமைப்புகளை பயன்படுத்தும் கட்டுமான முறையாகும் என்று அவர் விளக்கினார்.“இந்த முறை, ஆற்றங்கரைகளை வலுப் படுத்தவும், நீரோட்ட திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் வெள்ள அபாயம் குறையும்,” என்று டேனியல் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

அன்றைய தினம், அவர் மாநில கட்டமைப்பு மற்றும் வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் உடன் இணைந்து சுங்கை கிள்ளான் SPS தளத்தை பார்வையிட்டு, நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் சிலாங்கூர் மரிடைம் கேட்வே (SMG) அதிகாரிக-ளிடமிருந்து திட்டம் குறித்த தொழில் நுட்ப விளக்கத்தை பெற்றார்.

“இந்த திட்டம் உள்ளூர் மக்களுக்கு நீண்டகால நன்மைகளை அளிக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.