அசீம் ஃபஹ்மி உதவியுடன் ஆபர்ன் பல்கலைக்கழகம் 4x100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது – அட்லாண்டா

22 மார்ச் 2026, 9:36 AM
அசீம் ஃபஹ்மி உதவியுடன் ஆபர்ன் பல்கலைக்கழகம் 4x100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது – அட்லாண்டா

கோலாலம்பூர், 22 மார்ச்: மலேசியாவின் ஓட்டபந்தய வீரர் முஹம்மது அசீம் முகமத் ஃபஹ்மி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற Yellow Jacket Invitational போட்டியில், ஆபர்ன் பல்கலைக்கழகத்தின் 4x100 மீட்டர் அணிக்கு தங்கப் பதக்கம் வெல்ல உதவினார் (அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை).

முஹம்மது அசீம், அலெஹாண்ட்ரோ கார்டெனாஸ், ஐயன் மையர்ஸ் மற்றும் டைலர் டேவிஸ் ஆகியோருடன் இணைந்து 39.75 விநாடிகளில் போட்டியை முடித்து முதல் இடத்தைப் பெற்றனர்.இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை, எமெரி எக்கர்ட், ஜோயல் நிமோ, வெசெல் வாண்டர்நெஸ்ட் மற்றும் ஜஸ்டின் டேவிஸ் ஆகியோர் அடங்கிய லிப்ஸ்கோம் பல்கலைக்கழக அணி 41.93 விநாடிகளில் முடித்தது. 

மீதமுள்ள ஐந்து அணிகள் போட்டியை நிறைவு செய்யாதது (DNF) அல்லது தொடங்காதது (DNS) காரணமாக, மூன்றாம் இடத்திற்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.இந்த போட்டியில், நேற்று 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, முஹம்மது அசீமின் இது இரண்டாவது பதக்கமாகும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.