தங்கத்தின் விலை 10% க்கும் மேல் சரிவு – தற்காலிகம் மட்டுமே என நிபுணர்கள் கருத்து

22 மார்ச் 2026, 9:43 AM
தங்கத்தின் விலை 10% க்கும் மேல் சரிவு – தற்காலிகம் மட்டுமே என நிபுணர்கள் கருத்து

கோலாலம்பூர், 21 மார்ச்: சந்தையில் பண புலக்கம் குறைந்தால், உண்மையான வருமான உயர்வு மற்றும் தங்கத்தின் உடனடி தேவை தற்காலிகமாக குறைந்திருப்பது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தற்போது குறைந்தாலும், இது நீண்டகால மாக்ரோ பொருளாதார பார்வையில் மாற்றமாக கருதப்பட வேண்டியதில்லை என்று ஒரு பகுப்பாய்வாளர் தெரிவித்தார்.

எஸ்பிஐ சொத்து நிறுவனத்தின் (SPI Asset Management) நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளரான ஸ்டீபன் இன்னஸ் கூறுகையில், முதலீட்டாளர்கள் மாக்ரோ பொருளாதாரத்தின் பரந்த நிலையை தவறாக புரிந்து கொள்வதோ அல்லது பணவியல் கொள்கையில் ஏற்படும்  தளர்வு மாற்றத்தை சரியாக மதிப்பிடாததாலோ, தங்கம் தற்போது ஒரு “மாற்ற கட்டத்தில் சிக்கியுள்ளது” என்றார்.

“மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தினாலும் எந்த விளைவுகளும் ஏற்படாது என்று சந்தை இன்னும் நம்புகிறது. இந்த அமைப்பு அதிக வட்டியை எந்த பாதிப்பும் இன்றி தாங்கும் என நினைக்கப் படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்தார்.

அதிக வட்டி விகிதங்கள், கடன் சந்தை, பங்கு சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. குறிப்பாக கடன் மற்றும் லீவரேஜ் மீது அதிகமாக சார்ந்துள்ள உலக நிதி அமைப்பில் இது பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.“வட்டி விகிதங்கள் நீண்ட காலம் உயர்ந்த நிலையில் தொடர்ந்தால், கடன், பங்கு மற்றும் வளர்ச்சி துறைகளில் அழுத்தம் அதிகரித்து உச்சத்தை அடையும். அதன் பின்னர் கொள்கை மாற்றம் (pivot) ஏற்படும்,” என்றார்.

இன்னஸ் மேலும் கூறுகையில், பணவியல் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு வருமானம் குறையத் தொடங்கும் போது, தங்கம் மீண்டும் வலுப்பெறும். ஏனெனில் முதலீட்டாளர்கள் பொருளாதார நிச்சயமின்மைக்கு எதிரான பாதுகாப்பு முதலீடாக தங்கத்தைத் தேர்வு செய்வார்கள்.“தங்கம் வீழ்ச்சியடைந்ததாக இல்லை. சந்தை தவறாக புரிந்து கொண்ட சூழலில் அது தற்காலிகமாக பாதிக்கப் பட்டுள்ளது,” என்றார்.

இன்றைய ஆரம்பத்தில், துருக்கியின் அரசு செய்தி நிறுவனம் Anadolu Agency தெரிவித்ததாவது, 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு தங்கம் மிகப்பெரிய வாராந்திர சரிவை சந்தித்துள்ளது. அது 10% க்கும் அதிகமாக குறைந்து, US$4,500 க்கும் கீழ் சென்றுள்ளது (US$1 = RM3.933).“வெள்ளிக்கிழமை, ஒரு அவுன்ஸுக்கு US$4,477.5 முதல் US$4,735.81 வரை விலையிலி- ருந்த தங்கம், 19 40 GMT நேரத்தில் US$ 4,509.08 ஆக இருந்தது. இது தினசரி 3% சரிவை காட்டுகிறது,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.