ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் தென் கொரியா ஆலோசனை

22 மார்ச் 2026, 5:40 AM
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் தென் கொரியா ஆலோசனை

சோல் மார்ச் 21 — ஹார்முஸ் நீரிணையை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் தென் கொரியா நெருக்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு-ள்ளது. யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

A map showing the Strait of Hormuz is seen in this illustration taken June 22, 2025.

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து ஹார்முஸ் கடல் வழி கிட்டத்தட்ட மூடப் பட்டிருந்த நிலையில், தெஹ்ரான் ஜப்பான் நோக்கிச் செல்லும் கப்பல்களை அனுமதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய பிறகு இந்தப் பேச்சுகள் நடைபெறுகின்றன.

“அரசு மத்திய கிழக்கில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நமது குடிமக்களைப் பாதுகாப்ப-தற்கும், எரிசக்தி போக்குவரத்து வழிகளை உறுதி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.

ஈரான் உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன் தீவிரமாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் இன்று தெரிவித்தார். இன்று காலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கியோடோ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தோக்கியோவுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஜப்பான் நோக்கிச் செல்லும் கப்பல்களை முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் நீரிணை வழியாக அனுமதிக்க தெஹ்ரான் தயாராக உள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்துக்கு மேல் ஹார்முஸ் நீரிணை பங்கு வகிக்கிறது.

எண்ணெய் டேங்கர்களுக்கு அனுமதியளிக்கப் படும் அனைத்து பாதைகளும் ஈரான் இறையாண்மை நீர்ப் பகுதியில் அமைந்துள்ளன.

எனவே தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு இந்த நீரிணை மிக முக்கியமான உயிர் நாடியாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் இணைந்து, வளைகுடாவில் ஈரான் நடத்திய தாக்குதல்களை  தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையின் உண்மையான மூடலை  கண்டிக்கும் கூட்டு அறிக்கையில் தென் கொரியா கையெழுத்திடும் என நேற்று, சோல் தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்தது. இதனால் ஈரான் ஹார்முஸ் நீரிணையை உண்மையில் மூடியது. இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும் அச்சத்தை எழுப்பியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.