கோத்தா திங்கி மார்ச் 12; இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இன்று மதியம், கோத்தா திங்கி–குளுவாங் சாலையின் 8.4-வது கிலோமீட்டரில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
புரோடுவா மைவி மற்றும் அல்சா கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து மதியம் 1.45 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரிடெண்டன்ட் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 61 வயதான தனது பாட்டி ஓட்டிச் சென்ற புரோடுவா அல்சா காரில் பயணம் செய்த சிறுவன், தலையில் பலத்த காயம் அடைந்தான். கோத்தா திங்கி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் உயிரிழந்தான்.
புரோடுவா மைவி கார் எதிர்திசைக்குச் சென்றதால், புரோடுவா அல்சா காருடன் நேருக்கு நேர் மோதியதாக நம்பப்படுகிறது.
"சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப் பட்டுள்ளது, மேலும் விபத்தில் சிக்கிய மற்றவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
இரு வாகன விபத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான்
14 மார்ச் 2026, 4:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிபுவில் சுற்றுலா பேருந்து விபத்து; 23 பேர் காயம்
Media Selangor Team
31 ஆகஸ்ட் 2026

video
Sunway Lagoon confirms accident, provides medical aid to victims
Kathiravan Manoharan
26 ஆகஸ்ட் 2026

national
புக்கிட் பெருந்தோங்கில் விபத்து; பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Media Selangor Team
19 ஆகஸ்ட் 2026

national
தெமர்லோ அருகே லாரி-கார் மோதி பயங்கரத் தீ விபத்து: நசுங்கிய காரில் இருந்தவர்கள் பலி
Media Selangor Team
14 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



