சமயோசித புத்தி இரக்க மனப்பான்மையால் பொது மக்களை கவர்ந்த லாலா மோவ் ஓட்டுனர்

12 மார்ச் 2026, 8:13 AM
சமயோசித புத்தி இரக்க மனப்பான்மையால் பொது மக்களை கவர்ந்த லாலா மோவ் ஓட்டுனர்

கோலாலம்பூர் மார்ச் 12;- மருத்துவ அவசரத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு குடும்பத்திற்கு, போக்குவரத்து நெரிசலைக் கடந்து சிகப்பு விளக்கில் இருந்து முன்னேறிச் செல்ல உதவிய லாலமோவ் ரைடருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்தனர்.


சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொலி ஒன்று வைரலானதை அடுத்து, இந்தச் சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கார் ஒன்று  சாலையில் வழக்கத்திற்கு மாறாக அங்கும் இங்கும் செல்வது வித்தியாசமாகத் தெரிந்ததாகவும், பின்னர் காருக்குள் எவருக்கோ ஆபத்து, அவசர மருத்துவ உதவி தேவை என்பதை உணர்ந்ததாகவும் ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கார் சிகப்பு விளக்கில் மாட்டிக்கொண்டது. நல்லவேளையாக, அவ்வழியாக வந்த 'லாலாமோவ்' ரைடர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார்.

முன்னதாக, காரில் இருந்தவர்கள் மற்ற மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் உதவி கேட்டும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றது காணொலியில் பதிவாகியுள்ளது.

ஆனால், அந்த P-hailing ரைடர் உடனடியாக போக்குவரத்தைச் சரிசெய்து, சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த போதிலும் அந்தக் கார் முன்னேறிச் செல்ல வழிவகை செய்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த ஓட்டுனரின் இரக்க குணத்தையும் தன்னலமற்ற சேவையையும் பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.