ஈரான் போர் சூழலால் பொருளாதார பாதிப்பு: அவசரகால கச்சா எண்ணெய் இருப்பை வெளியிட ஜி7 நாடுகள் பரிசீலனை

12 மார்ச் 2026, 4:09 AM
ஈரான் போர் சூழலால் பொருளாதார பாதிப்பு: அவசரகால கச்சா எண்ணெய் இருப்பை வெளியிட ஜி7 நாடுகள் பரிசீலனை

பாரிஸ்: ஈரானின் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைத் தொடர்ந்து, உலகின் முக்கியப் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி7 நாடுகள், தங்களது அவசரகால எண்ணெய் கையிருப்பு  வெளியிடுவது  செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.

"இந்தச் சூழலைச் சமாளிக்க, மூலோபாய  யுக்தியை பயன்படுத்துவது உட்பட, முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுப்பதை நாங்கள் கொள்கையளவில் ஆதரிக்கிறோம்," என்று ஜி 7 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜி 7 குழுவிற்கு தற்போதைய தலைமை வகிக்கும் பிரான்ஸ் புதன்கிழமை வெளியிட்டது.

இந்த மோதல் தொடங்கியதிலிருந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஜி 7 குழுவில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

போரின் பொருளாதாரத் தாக்கம் மற்றும் எரிசக்தி நிலவரம் குறித்து ஜி7 தலைவர்கள் புதன்கிழமை மாலை காணொலி வாயிலாக விவாதிக்க உள்ளனர்.

சமீப நாட்களாக, நாடுகளின் எண்ணெய் கையிருப்பு விற்பனை  செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துலக எரிசக்தி முகமையும் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.