கோலா காரிங் செலாத்தான் சுகாதார நாள்: வரும் ஞாயிறு இலவச அக்குபஞ்சர், எலும்பு சீரமைப்பு சிகிச்சையுடன் நடைபெறும் 

11 மார்ச் 2026, 6:02 AM
கோலா காரிங் செலாத்தான் சுகாதார நாள்: வரும் ஞாயிறு இலவச அக்குபஞ்சர், எலும்பு சீரமைப்பு சிகிச்சையுடன் நடைபெறும் 

ஷா ஆலாம், மார்ச் 11: கோலா காரிங் செலாத்தான் வட்டார மக்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ‘கோலா காரிங் செலாத்தான் கிராம மக்களுடனான சுகாதார தின’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி, சுகாதார பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற சமூகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களுக்குப் பல சுகாதார சேவைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.

"வழங்கப்படும் சிகிச்சைகளில் எலும்பு சீரமைப்பு மற்றும் அக்குபஞ்சர் ஆகியவை அடங்கும். இது உள்ளூர் மக்களின் சுகாதார நலனை மேம்படுத்த உதவும்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி, மார்ச் 15, 2026
(ஞாயிறு) அன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோலா காரிங் செலாத்தான் கிராமக் கோயிலில் நடைபெறும்.

சிகிச்சைக்கான கடைசிப் பதிவு காலை 11.30 மணி வரை மட்டுமே என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் சிகிச்சை பெற மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்தினருடன் சந்தித்து உரையாடும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேல் விவரங்களுக்கு,
017-6732401 என்ற எண்ணில் திருமதி இயோங்கைத் (Ms. Yeong) தொடர்புகொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.