மலேசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் ரோபர்ட் குவோக்

11 மார்ச் 2026, 3:26 AM
மலேசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் ரோபர்ட் குவோக்

கோலாலம்பூர்: புகழ் பெற்ற தொழிலதிபர்  102 வயது  டான் ஸ்ரீ ரோபர்ட் குவோக்,    மலேசியாவின் முதல் நிலை  பணக்காரர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஃபோர்ப்ஸ் சஞ்சிக்கை ஆண்டுதோறும் வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அவர் தற்போது 204-வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு 12.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அவரின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 14.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளாக நாட்டின் முதல் நிலை கோடீஸ்வரராக திகழ்ந்து வருபவர் டான் ஸ்ரீ ரோபர்ட் குவோக் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் கூக் குழுமம் (Kuok Group), செம்பனை எண்ணெய், கப்பல் போக்குவரத்து, சொத்து மேம்பாடு, ஹோட்டல் நிர்வாகம் என பல முக்கியத் துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

அவரின் நிறுவனங்களிலேயே மிகவும் பிரபலமானது ஷங்ரி-லா ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Shangri-La Hotels and Resorts) ஆகும்.

இதனிடையே,  ரோபர்ட்   குவோக்கைத் தொடர்ந்து, ஹாங் லியோங் வங்கியின் டான் ஸ்ரீ குவேக் லெங் சான், 99 ஸ்பீட் மார்ட் நிறுவனர் டத்தோ ஸ்ரீ லீ தியாம் வா, மற்றும் டான் ஸ்ரீ சையத் மோக்தார் அல்புகாரி உட்பட மேலும் 14 மலேசியர்கள் இந்த உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.