ஐடிபி பெர்லின் கண்காட்சியில் சிலாங்கூர் மாநிலத்தின் ஜியோபார்க் சுற்றுலாத் தலங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன

9 மார்ச் 2026, 8:03 AM
ஐடிபி பெர்லின் கண்காட்சியில் சிலாங்கூர் மாநிலத்தின் ஜியோபார்க் சுற்றுலாத் தலங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 9: 'சிலாங்கூர் வருகை ஆண்டு 2026' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப், பெர்லினில் அண்மையில் நடைபெற்ற ஐடிபி பெர்லின் 2026 (ITB Berlin 2026) சர்வதேச சுற்றுலாச் சந்தையில் சிலாங்கூர் சுற்றுலா வாரியம் தனது ஜியோபார்க் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஐரோப்பியச் சந்தையினரிடையே மேம்படுத்தியது.

மாநிலத்தின் தனித்துவமான இயற்கை சார்ந்த சுற்றுலாத் தயாரிப்புகளில் இந்த ஜியோபார்க்குகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த வாரியம் தெரிவித்தது.

 ஐடிபி பெர்லின் 2026-இல் பங்கேற்றதன் மூலம், சர்வதேச சுற்றுலாத் துறையினருடனான தொடர்புகள் வலுவடைந்துள்ளதோடு, ஐரோப்பியச் சந்தையில் சிலாங்கூரின் சுற்றுலாத் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 'டஸ்கி லீஃப் அட்வென்ச்சர்ஸ்' (Dusky Leaf Adventures) நிறுவனத்துடன் இணைந்து, ஐரோப்பியச் சந்தையை இலக்காகக் கொண்ட 'சிலாங்கூர் ஆச்சரியமூட்டும் தனித்துவமான அனுபவங்கள்' எனும் சுற்றுலாத் தொகுப்புகளையும் வாரியம் அறிமுகப்படுத்தியது.

 இந்தக் கண்காட்சியின் போது, சிலாங்கூர் சுற்றுலா வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் தலைமையிலான குழுவினர், மலேசிய பெவிலியன் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் அவர்களும் சிலாங்கூர் அரங்கிற்கு வருகை தந்தார். மேலும், மார்ச் 4 அன்று முக்கிய பங்காளிகளுடன் நடைபெற்ற இரவு உணவு சந்திப்பின் மூலம் ஐரோப்பாவில் சிலாங்கூர் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்த ஐடிபி பெர்லின் சுற்றுலா வர்த்தகக் கண்காட்சி, மார்ச் 3 முதல் 5 வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு 8.42 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து இலக்கைத் தாண்டிய சிலாங்கூர், இந்த 2026-ஆம் ஆண்டில் ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 'மலேசியா வருகை ஆண்டு 2026' பிரச்சாரத்துடனும் ஒத்துப்போகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.