42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி

7 மார்ச் 2026, 1:38 PM
42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி

கோலாலம்பூர் மார்ச் 7;- மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி எனும் 33 வயது இளைஞர், ஆண்களுக்கான பிரிவில் அதிக பற்களைக் கொண்டவர் என்ற அடிப்படையில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சாதாரணமாக ஒருவருக்கு 32 பற்கள் இருப்பது இயல்பு. ஆனால், பிரதாப்பிற்கு மொத்தம் 42 பற்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, தமது குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோதுதான், தமக்குக் கூடுதல் பற்கள் இருப்பதை அவர் முதன்முதலில் கவனித்துள்ளார். அப்போது அவருக்கு 38 பற்கள் இருப்பதாக எண்ணிய நிலையில், பின்னர் மேற்கொண்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் மேலும் 4 பற்கள் உள்ளுக்குள் இருப்பது கண்டறியப்பட்டது.

2023-ஆம் ஆண்டுக்குள், அந்தப் பற்களும் முழுமையாக வளர்ச்சி கண்டதை அடுத்து, அவரது மொத்த பற்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது.

இந்தக் கூடுதல் பற்களால் தனது அன்றாட வாழ்வில் எந்தப் பாதிப்பும் இல்லை என பிரதாப் கூறுகிறார். அவை இயல்பாகவே வளர்ந்துள்ள- தாகவும், தாமே சுட்டிக்காட்டாதவரை மற்றவர் அதனைக் கவனிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியர் ஒருவர், பற்களின் எண்ணிக்கையில் உலக சாதனை படைத்திருக்கும் இந்தச் செய்தி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.