கிள்ளானின் மேரு காவல் நிலையத்தில் கலவரம் செய்த நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்; மூவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர் 

7 மார்ச் 2026, 3:35 AM
கிள்ளானின் மேரு காவல் நிலையத்தில் கலவரம் செய்த நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்; மூவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர் 

கிள்ளான், மார்ச்  7- கிள்ளான் மேரு காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்து கலவரம் செய்ததாக ஆடவர்கள் மீது  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

.இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.இவ்வழக்கில், இருவர் மீது தலா மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரும் 13,000 ரிங்கிட் ஜாமீன் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

மற்றவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 9,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக மே 25-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தார்.

ஒரு வீடமைப்புப் பகுதியின் பாதுகாப்புக் கூடாரத்தைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இந்தச் சண்டை மூண்டதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்றும், அவர்கள் குண்டர் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் முன்னதாக தெரிவித்திருந்தார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.