கால்வாய்க்குள் விழுந்த டிரெய்லர்; ஓட்டுநர் உயிர் தப்பினார்

5 மார்ச் 2026, 8:25 AM
கால்வாய்க்குள் விழுந்த டிரெய்லர்; ஓட்டுநர் உயிர் தப்பினார்

ஷா ஆலம், மார்ச் 5: சிகிஞ்சான், சுங்கை லேமான் பகுதியில் நேற்று இரவு டிரெய்லர் ஒன்று இரண்டு கார்கள் மீது மோதி, பின்னர் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து இரவு 10.53 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

 தகவல் அறிந்ததும், சிகிஞ்சான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விபத்து நடந்த இடத்திற்கு எட்டு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. முதற்கட்ட விசாரணையில், ஒரு டிரெய்லரும் இரண்டு கார்களும் மோதிக்கொண்டதில், டிரெய்லர் ஓட்டுநர் தனது இருக்கையில் உடல் நசுங்கி சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

 சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர். அந்த ஓட்டுநருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.