ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு 

2 மார்ச் 2026, 8:11 AM
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு 

தெஹ்ரான், மார்ச் 2- ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துல்லியமான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து திட்டமிட்டு நடத்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்புத் தரப்பு மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில், தனது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட அந்த அலுவலக வளாகத்தின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை பிபிசி (BBC) நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைப் பிரிவுடன் (IRGC) தொடர்புடைய 'தஸ்னிம்' செய்தி நிறுவனம், கமேனி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக உச்ச தலைவர் பாதுகாப்பிற்காக மறைவிடத்தில் ஒளிந்திருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என்று அந்தச் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.மறைந்த தலைவர் தலைமறைவாக இருந்ததாகப் பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் எதிரிகளின் "மனோரீதியான போர்முறை" (Psychological Warfare) என தஸ்னிம் நிறுவனம் வர்ணித்துள்ளது.

ஈரான் தேசத்தின் மிக உயரிய தலைவரின் மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 40 நாட்களுக்குத் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது ஈரானில் ஏற்பட்டுள்ள இந்தத் தலைமைத்துவ வெற்றிடமும், அதற்குப் பிந்தைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் சர்வதேச சமூகத்தின் உன்னிப்பான கவனத்தைப் பெற்றுள்ளன

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.