புத்ராஜெயா, மார்ச் 1 - தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, எண்ணெய் விலையில் ஒவ்வொரு விழுக்காட்டு அதிகரிப்புக்கும் தங்கத்தின் விலை சுமார் 0.20 முதல் 0.35 விழுக்காடு வரை அதிகரிக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்ற வழிவகுத்துள்ளதோடு அதன் விநியோகத்திலும் இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது
அதனால், தங்கத்தின் விலை சுமார் 125-இல் இருந்து 220 அமெரிக்க டாலர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்னாமா








