பாகான் டத்தோ, மார்ச் 1 — பேராக், பாகான் டத்தோவில் சுமார் ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு RM180,000 மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது.
மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரை, இந்த மாவட்டத்தில் இந்தியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“இனம், மதம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக,” அவர் விளக்கினார்.
பாகான் டத்தோவிலுள்ள உத்தான் மெலிந்தாங்கில் நடைபெற்ற கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
— பெர்னாமா




