RM3.5 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 100 காதல் மோசடி வழக்குகள் பதிவு

22 பிப்ரவரி 2026, 7:08 AM
RM3.5 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 100 காதல் மோசடி வழக்குகள் பதிவு

கோலாலம்பூர், பிப் 22: ஜனவரி மாதத்தில் RM3.5 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 100 காதல் மோசடி வழக்குகளைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஐந்து வழக்குகள் அதிகரித்துள்ளதாகப் புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவான மொத்த இழப்புகள் RM3.5 மில்லியன் ஆகும், இது கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட RM4.9 மில்லியன் இழப்புகளுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் குறைவு ஆகும்.

“இதில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது, அதாவது மொத்த வழக்குகளில் 60 சதவீமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் ஆண்கள் ஆவர். பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 72 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுடையவர்கள்,” என்றும் ருஸ்டி முகமட் கூறினார்.

பொதுமக்கள் இந்த மோசடி குறித்து எப்போதும் கவனமாக இருக்கவும், https://semakmule.rmp.gov.my இல் உள்ள PDRM Semak Mule போர்ட்டலைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.