டுங்குன், ஜன 2 — பந்தாய் சூரா தெங்காவில் நீரில் மூழ்கி இறந்த இரண்டாவது நபரான முகமது ஃபசீர் ஷாஃபி (37) என்பவரின் உடல் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்புப் பணியாளர்கள் அவரது உடலை அதிகாலை 12.35 மணிக்கு, அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடித்தனர் என டுங்குன் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மைசுரா அப்துல் காதிர் கூறினார்.
"அவரது உடல் கோல திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
முகமது ஃபசீர் தனது 39 வயதான சகோதரி நோர் பைசுராவை நீரில் மூழ்கவிடாமல் காப்பாற்ற முயன்றபோது, இருவரும் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நோர் பைசுராவின் உடல் நேற்று காலை 10.54 மணிக்கு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோர் பைசுரா, ஜோகூர் பாருவில் வசித்து வரும் ஓர் இல்லத்தரசி ஆவார் மற்றும் முகமது ஃபசீர் குவாந்தனில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.








