25 ஆதரவற்ற பிள்ளைகளைச் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் சந்தித்தார்; மண்டபம் கட்ட பி.கே.என்.எஸ் 100,000 வெள்ளி நன்கொடை

25 பிப்ரவரி 2026, 8:35 AM
25 ஆதரவற்ற பிள்ளைகளைச் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் சந்தித்தார்; மண்டபம் கட்ட பி.கே.என்.எஸ் 100,000 வெள்ளி நன்கொடை

ஷா ஆலம், பிப் 25: இங்குள்ள செகண்டி ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா கலந்து சிறப்பித்தார்.

சிலாங்கூர் அரச குடும்ப அலுவலகத்தின் (Selangor Royal Office) முகநூல் பதிவின்படி, அந்த ஆதரவற்றோர்இல்லத்தில் உள்ள 25 ஆதரவற்ற பிள்ளைகளைச் சந்தித்த இளவரசர், அவர்களின் பெருநாள் கொண்டாட்ட ஆயத்தப்பணிகளை மேலும் சிறப்பிக்கும் வகையில் கைலி, பாத்திக் துணி மற்றும் நோன்புக்கால அன்பளிப்புப் பணம் ஆகியவற்றை வழங்கினார்.

அதுமட்டுமின்றி, ஷவ்வால் மாதத்தை முன்னிட்டு இல்லத்தின் பயன்பாட்டிற்காக 100 கிலோகிராம் அரிசியையும் இளவரசர் அன்பளிப்பாக வழங்கினார்.

அதே நிகழ்வில், இல்லத்திற்கான மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்காக சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்) வழங்கிய 100,000 வெள்ளி மதிப்புள்ள மாதிரி காசோலை கையளிக்கும் நிகழ்வையும் தெங்கு அமீர் ஷா பார்வையிட்டார்.

மேலும், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள தொழுகைக்கூடத்தைச் சீரமைக்கும் பணிகளுக்காக சிலாங்கூர் வக்காஃப் வாரியம் (பிடபுள்யூஎஸ்) 41,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.