நிப்பா வைரஸ்: மலேசியா தொடர்ந்து பாதுகாப்பான நாடு; நோய் பரவல் அபாயத்தைக் கால்நடை சேவைகள் துறை தீவிரமாகக் கண்காணிப்பு

23 பிப்ரவரி 2026, 5:28 AM
நிப்பா வைரஸ்: மலேசியா தொடர்ந்து பாதுகாப்பான நாடு; நோய் பரவல் அபாயத்தைக் கால்நடை சேவைகள் துறை தீவிரமாகக் கண்காணிப்பு

கோலாலம்பூர், பிப் 23 - மலேசியாவில் நிப்பா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்றும், நாடு தொடர்ந்து இந்த நோயிலிருந்து விடுபட்ட பாதுகாப்பான நாடாகத் திகழ்வதாகவும் கால்நடை சேவைகள் துறை (DVS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிப்பா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியா தனது எல்லைகளிலும் உள்நாட்டிலும் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2,000 வளர்ப்புப் பன்றிகள் மற்றும் 48 காட்டுப் பன்றிகளிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் ஆண்டுதோறும் தொடர்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், நிப்பா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடுகளிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளிடம் ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.