உரிமம் இன்றி வியாபாரம்: ரமலான் சந்தை வியாபாரிகளுக்கு அபராதம்

20 பிப்ரவரி 2026, 8:00 AM
உரிமம் இன்றி வியாபாரம்: ரமலான் சந்தை வியாபாரிகளுக்கு அபராதம்

ஷா ஆலம், பிப் 20: சுங்கை ஊடாங், சிம்பாங் எம்பாட் உணவுச் சந்தையில் விதிகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகக் கிள்ளான் அரச மாநகர சபை நேற்று இரண்டு அபராதங்களையும் 11 நோட்டீஸ்களையும் வெளியிட்டது.

 நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 180 வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகர சபை தெரிவித்தது. உரிமம் இன்றி வியாபாரம் செய்தது மற்றும் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றத் தவறியது ஆகிய குற்றங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வியாபாரிகளும் தங்கள் வணிக உரிமத்தை எப்போதும் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்," என்று கிள்ளான் அரச மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

வருகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நோக்கில், 2007-ஆம் ஆண்டின் வியாபாரிகள் துணைச் சட்டம் 3 மற்றும் 38(1)-ன் கீழ் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.