ராஜா போட் வளாக இடமாற்றத்தை ஒத்திவைக்க 34 கடை உரிமையாளர்கள் கோரிக்கை

19 பிப்ரவரி 2026, 5:42 AM
ராஜா போட் வளாக இடமாற்றத்தை ஒத்திவைக்க 34 கடை உரிமையாளர்கள் கோரிக்கை

கோலாலம்பூர், பிப் 19 – சௌக்கிட், லோரோங் ஹாஜி ஹுசைன் பகுதியில் உள்ள 34 கடை உரிமையாளர்கள், ராஜா போட் சந்தை வளாகத்தின் மேம்பாட்டுத் திட்டம் முழுமையாக நிறைவடையும் வரை தங்களை அவ்விடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பெரும்பாலான வர்த்தகர்கள் புதிய இடத்திற்குச் செல்ல ஒப்புக்கொண்டாலும், தங்கள் வணிகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்ய அந்தத் திட்டம் முதலில் முடிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சரான டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி  தெரிவித்தார்.

 "புதிய இடத்திற்கு மாறுவதற்கு முன், ராஜா போட் சந்தை வளாகம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட வேண்டும். ஏனெனில், அது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது," "சிறு வணிகர்கள் இப்போதே மாற்றப்பட்டால், கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்து வருவதால் அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

 இந்த விவகாரத்தைக் கோலாலம்பூர் மாநகர் மேயர் டத்தோ ஸ்ரீ பட்லுன் மாக் உஜுட் கவனத்திற்குக் கொண்டு செல்லப்போவதாகக் அவர் கூறினார். 

முன்னதாக, ராஜா போட் சந்தை அல்லது சௌக்கிட் சந்தை என அழைக்கப்படும் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், வாடிக்கையாளர் பற்றாக்குறையால் விற்பனை குறையும் என்ற கவலையில், மறுசீரமைப்புக்காகப் புதிய ராஜா போட் சந்தை வளாகத்திற்குச் செல்லத் தயக்கம் காட்டியதால் இந்த விவகாரம் எழுந்தது.

.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.