'காஜாங்கில் உரிமமின்றி இயங்கிய தளம்: 190 எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
காஜாங், பிப் 16 –
காஜாங்கில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த ஒரு தளத்தில் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) நடத்திய சோதனையில் 190 திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிப்ரவரி 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் சுமார் 83,116 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதன் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.
துத்தநாக வேலிகளால் சூழப்பட்ட அந்தப் பகுதி பூட்டப்பட்டிருந்த போதிலும், ரகசியத் தகவலின் அடிப்படையில் அமலாக்கக் குழுவினர் உள்ளே நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு லாரி மற்றும் கார் ஓட்டுநர்களாகப் பணியாற்றிய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அதிகாரிகளிடம் சிக்கினர்.
அந்த வளாகத்தில் இருந்த டெய்ஹாட்சு ரக லாரியில் 110 சிலிண்டர்களும், தளத்தின் மேடையில் மேலும் 80 சிலிண்டர்களும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
14 கிலோ மற்றும் 50 கிலோ எடை கொண்ட அந்த எரிவாயு சிலிண்டர்கள் செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், காஜாங்கில் உள்ள அந்தத் தளம் கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்களைச் சேமித்து வைக்கவோ அல்லது வணிகம் செய்யவோ முறையான உரிமம் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்த லாரியுடன் சேர்த்து அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன.
இந்த விவகாரம் 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் குற்றஞ்சாட்டப்படும் தனிநபர்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும், நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மஹா சிவராத்திரி 2026: இறையருள் பெருகும் மங்கல இரவு - மலேசிய பக்தர்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டி
கோலாலம்பூர் பிப்ரவரி 16:
நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் நேற்று மஹா சிவராத்திரி விழாவை மிகுந்த பக்தியுடனும், ஆன்மீக எழுச்சியுடனும் கொண்டாடினார்கள். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த உன்னதமான இரவு, "சிவராத்திரி" அல்லது "சிவனுக்குரிய இரவு" என்று அழைக்கப்படுகிறது.
மங்கலத்தையும் நன்மைகளையும் வாரி வழங்கும் சிவபெருமானை போற்றும் வகையில், மலேசியாவில் ஜாலான் மாரோப் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரார் ஆலயம், பண்டார் பாரு சொந்துல் ஸ்ரீ ஆதிஸ்வரார் ஆலயம்,
பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் உள்ள சிவன் சந்நிதி மற்றும் பல சிவாலயங்களில் நேற்று சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புனிதமான தினத்தின் பின்னணியில் பல உன்னதமான புராணக் கதைகள் மறைந்துள்ளன.ஒரு முறை பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, இறைவன் ஒரு பிரம்மாண்ட நெருப்புத் தூணாக (லிங்கோத்பவர்) காட்சியளித்து அவர்களின் ஆணவத்தை அடக்கிய இரவு இதுவாகும்.
மேலும், தேவர்களையும் அசுரர்களையும் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக ஜீவன்களை காத்து அருளிய நாள் இதுவாகும்.
இதனால், இந்நாளில் சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது 'ஜாகரணம்' எனப்படும் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது மற்றும் 'உபவாசம்' எனப்படும் விரதம் இருப்பது ஆகும்.
இந்நாளில் பக்தர்கள் அன்ன ஆகாரத்தைத் தவிர்த்து, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து மனதை ஒருமுகப்படுத்துகின்றனர்.
குறிப்பாக, இந்த இரவு நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலத்திலும் தனித்துவமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
முதல் ஜாமத்தில் பால் இரண்டாம் ஜாமத்தில் தயிர், மூன்றாம் ஜாமத்தில் நெய் மற்றும் நான்காம் ஜாமத்தில் தேன் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும் புராண குறிப்பின் படி, முதலாம் கால பூஜை ஆனது பிரம்ம மற்றும் சரஸ்வதியாலும், இரண்டாவது கால பூஜை விஷ்ணு மற்றும் லக்ஷ்மியாலும், முன்றாம் கால பூஜை அம்பிகையாலும், இறுதியாக நான்காம் கால பூஜையானது தேவர்களாளும் பூஜிக்க படுகிறது.
இந்த நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்பது ஒரு ஆண்டு முழுவதும் சிவனை வழிபட்ட புண்ணியத்தை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
மலேசியத் தமிழ் மக்கள் இந்த நன்னாளில் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவனின் அருளைப் பெறுகின்றனர்.
உடல்நலம் மற்றும் மன அமைதிக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதம், பக்தர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கமான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது.
மஹா சிவராத்திரி 2026: இறையருள் பெருகும் மங்கல இரவு - மலேசிய பக்தர்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டி
கோலாலம்பூர் பிப்ரவரி 16:
நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் நேற்று மஹா சிவராத்திரி விழாவை மிகுந்த பக்தியுடனும், ஆன்மீக எழுச்சியுடனும் கொண்டாடுகின்றனர். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த உன்னதமான இரவு, "சிவராத்திரி" அல்லது "சிவனுக்குரிய இரவு" என்று அழைக்கப்படுகிறது.
மங்கலத்தையும் நன்மைகளையும் வாரி வழங்கும் சிவபெருமானை போற்றும் வகையில், மலேசியாவில் ஜாலான் மாரோப் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரார் ஆலயம், பண்டார் பாரு சொனதுல் ஸ்ரீ ஆதிஸ்வரார் ஆலயம்,