கோலாலம்பூர், பிப் 13 – ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படும் உலக வானொலி தினம் 2026-ஐ முன்னிட்டு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சிறந்த தகவல்தொடர்பை உறுதிசெய்து, பயனுள்ள மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கி, தரமான பொழுதுபோக்கை அளிக்கும் அனைத்து வானொலி ஊழியர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், உலகளாவிய புரிதலையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதிலும் வானொலி தொடர்ந்து நம்பகமான ஊடகமாகத் திகழ வேண்டும்," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு "வானொலியும் செயற்கை நுண்ணறிவும் (AI)" என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வாழ்த்து சுவரொட்டியையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
உலக வானொலி தினம்: ஃபஹ்மி ஃபட்சில் வாழ்த்து
13 பிப்ரவரி 2026, 7:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?




