இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் சோஸ்மா சட்டத் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும்

10 பிப்ரவரி 2026, 3:45 AM
இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் சோஸ்மா சட்டத் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும்

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) மீதான திருத்தங்கள் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தொடங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்தத் திருத்தங்களின் ஒரு பகுதியாக, குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது, சோஸ்மா சட்டத்தின் கீழ் பதிவு
செய்யப் பட்ட சுமார் 73 குற்றங்கள் ஒரே மாதிரியாகக் கையாளப்படுகின்றன. குறிப்பாக, ஜாமீன் தொடர்பான பிரிவு 13 மற்றும் நீண்ட விசாரணை காலம் தொடர்பான பிரிவு 30 ஆகியவை இதில் அடங்கும்.

"கடுமையான சிறைத் தண்டனைகளை (உதாரணமாக, 20 அல்லது 30 ஆண்டுகள்) கொண்ட குற்றங்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்."

"இருப்பினும், இலகுவான தண்டனைகளைக் கொண்ட குற்றங்களுக்கு ஜாமீன் வழங்குவதா வேண்டாமா என்பதை மாஜிஸ்திரேட் அல்லது துணை அரசு வழக்கறிஞர் தீர்மானிக்கலாம். இது தற்போதைய நிலையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்," என்று அவர் விளக்கினார்.

மக்களவையில் தனது அமைச்சகத்திற்கான மாமன்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், சோஸ்மா வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் சைபுடின் தெரிவித்தார். இந்த வழக்குகள் மிகவும் தீவிரமானவை என்பதற்காக அல்ல, மாறாக விசாரணை செயல்முறை மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்வதால் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

"விசாரணை செயல்முறையை விரைவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், சோஸ்மா மீதான மிகக் கடுமையான விமர்சனமே, ஜாமீன் மறுக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு விசாரணைக்காகக் காத்திருப்பது ஒரு தண்டனையாகக் கருதப்படுகிறது என்பதுதான்," என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.