எம்.எம்.2.எச் திட்டம் என்பது குடியுரிமை வழங்கும் தளம் அல்ல - சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் செங் தகவல்

4 பிப்ரவரி 2026, 8:53 AM
எம்.எம்.2.எச் திட்டம் என்பது குடியுரிமை வழங்கும் தளம் அல்ல - சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் செங் தகவல்

கோலாலம்பூர், பிப் 4- MM2H எனப்படும் மலேசியா எனது இரண்டாவது இல்லம் திட்டம் என்பது அரசாங்கம் குடியுரிமையை வழங்கும் தளம் அல்ல என்று சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ தியோங் கிங் செங் கூறினார்.

சமூக பயண அட்டை திட்டம் என்று சொல்லப்படும் இந்த எம்.எம்.2 எச். திட்டமானது வெளிநாட்டவர்கள் மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே மலேசியாவில் தங்க வழிவகை செய்யப்படுகிறது

இருப்பினும், இதுவரை எம்.எம்.2 எச் திட்டம் என்பது குடியுரிமை வழங்கம் ஒரு திட்டம் இல்லை.

கடந்த டிசம்பர் மாதம் சுமார் 744 பேர் இந்த MM2H திட்டத்தின் மூலமாக வீடுகளை வாங்கியுள்ளனர். இன்னும் 2637 பேர் வீடு வாங்கும் சூழலில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் சீன நாட்டவர்கள் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ளனர். அடுத்ததாக தைவான் நாட்டவர்களும் மூன்றாவதாக அமெரிக்கா நாட்டினர்களும் இதில் உள்ளனர் என்று அமைச்சர் தியோங் கிங் செங் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.