சமூக ஊடகத்தில்  வைரலான 'கன்வெனியன்ஸ் ஸ்டோர்' சண்டை  சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டனர்

2 பிப்ரவரி 2026, 7:56 AM
சமூக ஊடகத்தில்  வைரலான 'கன்வெனியன்ஸ் ஸ்டோர்' சண்டை  சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர், பிப் 1 — சமூக வலைதளங்களில் நேற்று வைரலான வீடியோவில் காட்டப்பட்ட கன்வெனியன்ஸ் ஸ்டோர் சண்டையில் ஈடுபட்ட சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமத் கூறுகையில், அன்று மதியம் 3.26 மணிக்கு கன்வெனியன்ஸ் ஸ்டோர் ஊழியரால் சம்பவம் தொடர்பான போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணையில், சந்தேக நபர் போதையில் உள்ளே நுழைந்து ஊழியரை தொந்தரவு செய்தது தெரியவந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே உடல் ரீதியான மோதல் ஏற்பட்டு காயங்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டது.“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

மேல் விசாரணைக்காக போலீசார் விசாரணை உத்தரவு (OTI) கோரிக்கை சமர்ப்பிப்பார்கள்.சந்தேக நபரும் சாட்சிகளும் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பவோ அல்லது அடிப்படையற்ற ஊகங்களை செய்யவோ வேண்டாம் என்று அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக செயல்பாட்டு அறையை 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும், இன்ஸ்பெக்டர் முகமட் ஷாஹிரென் இப்ராஹிம் 019-569 3864 அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்த படுகிறார்கள்.

நேற்று சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கன்வெனியன்ஸ் ஸ்டோரின் பணம் செலுத்தும் கவுன்டர் முன்பு இரு ஆண்கள் சண்டை போடுவது காட்டப்பட்டது. சில வாடிக்கையாளர்களும் இருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.