பத்துமலை ஜன 31, சிலாங்கூர் ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் வைபவம் இவ்வாண்டு 18 ம் ஆண்டாக பத்துமலை தைப்பூச விழாவில் தொடர்ந்தது. கடந்த 2009ம் ஆண்டு பக்காத்தான் ராயாட் ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெறும், இந்நிகழ்வினை அன்றைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பத்து மலை அடிவாரத்தில் பந்தல் அமைத்து ஆலயங்களுக்கு மானியம் வழங்குவதை ஆண்டு நிகழ்வாக நடத்தினார்.

அதன்பின் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இருந்த வீ. கணபதி ராவ் தொடர்ந்தார். இம்முறை மாண்புமிகு பாப்பா ராய்டு மேலும் மாநில அரசாங்கத்தின் அதிக ஒதுக்கீடுகள் பெற்று, பக்தர்களுக்கு அன்னதானத்துடன் ஆண்டு மானியமும் வழங்கி வருகிறார்.
இன்று, வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு அவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டுவின் உரைக்கு பின்னர் மானியம் வழங்கும் வருடாந்திர நிகழ்வு தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாக மானியம் பெற்ற சில ஆலயங்கள் தெரிவித்தது.
இன்றைய நிகழ்வில் தலைமையேற்று மந்திரி புசார் டத்தோ அமிருடினுடன், செலாயாங் நகராண்மைக் கழக தலைவர், கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானியம் பெற்றுக் கொண்ட ஆலயங்களின் தலைவர்கள் மாநில மந்திரி புசார் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராயுடுவுக்கு தங்கள் பாராட்டையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். இவ்வாண்டு மானியம் பெற்றுக் கொண்ட ஆலயங்களின் பின்வருமாறு.
1. ஸ்ரீ மகா மாரியம்மான் லாடாங் துவான் மீ சுங்கை புலோ
2. ஸ்ரீ மகா மாரியமன் லாடாங் டூசுன் டூரியான் 3. ஸ்ரீ மகா முனீஸ்வரர், பண்டார் பொட்டானிக்
4. ஸ்ரீ மஹா புத்து முனீஸ்வரன்
5. ஸ்ரீ மகா மாரியமன் லாடாங் கோல்பில்ஸ் சுங்கை பூலோ,
6. ஸ்ரீ சித்தி விஜயநகர், தெலோக் புனுட், பந்திங். 7. ஸ்ரீ மகா மாரியம்மன் லாடாங் லப்பான் ஹுத்தான் பத்து 2 கோல சிலாங்கூர்
8. ஸ்ரீ கருமாரியம்மன் கப்பார் கிள்ளான்
9. ஸ்ரீ வீரம்மா காளியம்மன்
10. ஸ்ரீ செல்வ விஜயநகர் ரவாங்
11. ஸ்ரீ மஹா மாரியம்மான் சுங்கை சிடு பந்திங் 12 ஸ்ரீ செல்வ விஜயநகர் கோவில் செரண்டா
13. ஸ்ரீ முருகன் பண்ட்ரா புரூக்லாண்ட்ஸ் பந்திங் 14. ஸ்ரீ மகா மாரியம்மன் பூச்சோங்,
15. ஸ்ரீ மகா மாரியம்மன் கோன பிரிஜ், கிள்ளான் 16. குயில் ஸ்ரீ சுப்ரமணியர் தெலுக்
17. ஸ்ரீ மகா ருத்ரா முனீஸ்வரர்
18. . ஸ்ரீ மகா மாரியம்மான் ஆயில் மில் பிக்கிட் ராஜா
19. ஸ்ரீ மஹா மரியம்மான், கம்போங் செஜந்துங், களும்பாங், உலு சிலாங்கூர்,
20 ஸ்ரீ சித்திவிநாயகர் பாண்டமாரன் கோலகிள்ளான்
21. ஸ்ரீ மகா மாரியம்மன் சாரிங்கிட் செமினி
22. ஸ்ரீ மஹா சிவராஜா காளியம்மன் ஜெராம்
23. ஸ்ரீ பாலா சுப்ரமணிய சுவாமி கோயில், போர்ட் ஸ்வெட்டன்ஹாம்
24. ஸ்ரீ முனீஸ்வரர் நாகம்மாள்
25 ஸ்ரீ மஹா வன பத்ரா காளியம்மன் & தர்ம கோதை முனீஸ்வரர்
26 ஸ்ரீ பகவதி ஞானாந்தா கிரி கிள்ளான்
27. ஸ்ரீ சுப்ரமணியர்
28. ஸ்ரீ மகா மாரியம்மன் பால் ஸ்டோர்
29 ஸ்ரீ மகா மாரியம்மன் தாமான் ஜத்தி, ரவாங்,
30. ஸ்ரீ மகா மாரியம்மன் பந்திங்
31. ஸ்ரீ மஹா முண்டகண்ணியாம்மன் சிராஸ்
32. ஸ்ரீ மகா கருமாரியம்மன், காஜாங்,
33 ஸ்ரீ மகா மாரியம்மன், கே. ஜி. கெலியாங், களும்பாங்,
34. ஸ்ரீ மகா மாரியம்மான் பண்டமாரான் ஜெயா
35 ஸ்ரீ அதிசய விநாயகர் சுங்கை பிலேக்
36. இந்து தேவா சீதா ராமா சங்கம் ஷா ஆலம் 37. ஸ்ரீ மஹா மாரியம்மன் தாமான் ஸ்ரீ முடா, ஷா ஆலம்
38. ஆத்ம வித்யா வனம் மலேசியா
39. ஸ்ரீ மகா மாரியம்மன் லாடாங் சுங்கை காப்பார்,
40. ஸ்ரீ சுப்ரமணியர்
41. ஸ்ரீ திரௌபதி அம்மன் தொங்கா மோரிப்
42. ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவில் கோல சாலை
43. ஸ்ரீ மகா மாரியம்மன் ஷா ஆலம்
44. ஸ்ரீ அம்மன் பத்து 6 ஜாலான் பந்திங்
45. ஸ்ரீ தண்டாயிதபாணி ஆலயம் பத்தாங் பெர்ஜூந்தாய்
46. உச்சி விநாயகர் ஆலயம் காஜாங்.
47. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தஞ்சோங் சிப்பாட்
48. தேவி அருள்மிகு ஸ்ரீ நாக காளி ஜெய் முனீஸ்வரர்
49 திருமுருகன் ஆலயம் தேசா ஜெயா கெப்போங்
50. ஸ்ரீ கல்லுமலை கருமாரியம்மன் தாமான் ஸ்ரீ மேலோர், காஜாங.
51 பெர்சத்துவான் பெங்கனுட் ஸ்ரீ மகா மாரியம்மன் காஜாங்
52. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில், அம்பாங்
53. தேவி ஸ்ரீ கருமாரியம்மன், சுங்கை பிளேக், சிப்பாங்.


