PJS 4 பிரச்சினை: JAIS-க்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை

31 ஜனவரி 2026, 5:28 AM
PJS 4 பிரச்சினை: JAIS-க்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை

ஷா ஆலம், ஜன 30 — சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (JAIS) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் (MAIS) ஆகியவை பெடாலிங் ஜெயா, PJS 4 பகுதியில் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலத்தில் நடந்த நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக இடமாற்ற உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று வலியுறுத்தியுள்ளது.

அதன் இயக்குநர் டத்தோ முகமட் ஷாஹ் ஜஹான் அஹ்மத் கூறுகையில், நில இடமாற்றத்தை நடத்தும் அதிகாரம் முழுமையாக மாநில அரசின் நில நிர்வாகியிடம் உள்ளது. இது தேசிய நிலச் சட்டத்தின் விதிகளின்படி.  குறிப்பிட்ட நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது.

தேசிய நிலச் சட்டத்தின் பிரிவு 62-இன் கீழ் பொது பயன்பாட்டுக்கு அரசிதழில் வெளியிடப்பட்டது. குறிப்பாக முஸ்லிம் அடக்கஸ்தலங்களுக்காக.“இந்த விவகாரத்தில் JAIS-இன் பங்கு கட்டுப்பாட்டு அதிகாரியாக மட்டுமே. அரசிதழில் குறிப்பிடப்பட்ட நோக்கத்தின்படி நில பயன்பாடு இணங்குதல் உறுதி செய்வது.

JAIS கட்டுப்பாட்டின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலம் மாநில அரசு நிலமாகவே உள்ளது. துறைக்கு சொந்தமானது அல்ல” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு அல்லது நில பயன்பாடு அரசிதழ் நோக்கத்திற்கு மாறாக இருந்தால், அமலாக்கத்திற்கு மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் புகார் அளிப்போம் என்று ஷாஹ் ஜஹான் கூறினார். PJS 4 வழக்கிலும் அவ்வாறே செய்யப்பட்டது. பகுதியில் ஒரு கோயில் இடிக்கப்படுவது தொடர்பாக, அது JAIS அல்லது MAIS-இன் கட்டுப்பாட்டிலோ உத்தரவிலோ இல்லை என்றார்.

முஸ்லிமல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. நில அக்கிரமிப்பு அமலாக்கம் தொடர்பான செலவுகள் அல்லது நிதி தாக்கங்களுக்கு வக்ஃப், ஜகாத் அல்லது பைத்துல்மால் நிதிகள் — சிலாங்கூர் முஸ்லிம் சமூக எண்டோமெண்ட் ஃபண்ட் (TIJARI) உட்பட — பயன்படுத்தப்படவில்லை.

“இந்த நிதிகள் முஸ்லிம் சமூகத்தின் அமானிதம். ஷரியா கொள்கைகள் மற்றும் இஸ்லாமிய நிதி ஆளுகைக்கு ஏற்ப அவற்றின் அசல் நோக்கத்துக்கு பயன்படுத்தப் பட வேண்டும்” என்று ஷாஹ்ஜிஹான் கூறினார்.

எனவே, PJS 4-இல் கோயில் இடிப்பு பிரச்சனை மத ஒடுக்கு முறையுடன் தொடர்பு படுத்த வேண்டாம் என்று இயக்குநர் பொது மக்களை வலியுறுத்தினார். இது உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்ட நில நிர்வாக விவகாரமாக பார்க்க வேண்டும்.

“JAIS மற்றும் MAIS சட்டம் மற்றும் நீதி, அமானிதம், சமூக இணக்கம் ஆகிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் பொறுப்புகளை தொழில் முறையாக தொடர்ந்து நிறைவேற்ற உறுதிப்பாடு தெரிவிக்கின்றன” என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.