பொருளாதார நிபுணர்கள் MB-இன் கார்ப்பரேட் வரி பகிர்வு முன்மொழிவை ஆதரிக்கின்றனர்

31 ஜனவரி 2026, 2:59 AM
பொருளாதார நிபுணர்கள் MB-இன் கார்ப்பரேட் வரி பகிர்வு முன்மொழிவை ஆதரிக்கின்றனர்
ஷா ஆலம், ஜன 31 — மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் வலுவான நிதி கூட்டாட்சி (fiscal federalism) கோரிக்கை — கார்ப்பரேட் வரி வருவாயில் 5 சதவீதத்தை மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பும் முன்மொழிவு உட்பட — பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான மற்றும் மாநில நிதியை ஸ்திரப்படுத்த உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுபோன்ற திட்டம் நிதி மற்றும் நிதி விபத்துகளைத் தவிர்க்க கவனமான வடிவமைப்பு தேவை என்று அவர்கள் எச்சரித்தனர்.

மீடியா சிலாங்கூரிடம் பேசிய பாங்க் முவாமலாத் மலேசியா தலைமை பொருளாதார நிபுணர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரஷீட், மாநிலங்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் அதிக சுயாட்சி இருப்பது நியாயமானது என்றும்,
“(முன்மொழிவு) அர்த்தமுள்ளது. இது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே வருவாய் பகிர்வையும் குறிக்கும்” என்றார்.

எனினும், அஃப்சானிசாம் இதுபோன்ற அமைப்பை அமல்படுத்துவது எளிதல்ல என்று குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் வெவ்வேறு பங்குதாரர்களுக்கும் கொள்கை முன்னுரிமைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியதால் விரிவான பேச்சுவார்த்தை தேவை. குறிப்பாக மத்திய அரசு பரந்த நிதி தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூடிஸ், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (S&P), ஃபிட்ச் போன்ற முகமைகள் மதிப்பிடும் இறையாண்மை கடன் மதிப்பீடுகள் நாணயம் மற்றும் மூலதன சந்தைகளில் அமைப்பு ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்.“எனவே, வருவாய் பகிர்வின் விளைவுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கடன் ஆபத்துக்கு தாக்கம் அளிக்கும்” என்றார்.

முன்னதாக, ஜனவரி 28 அன்று டேவான் ராக்யாட்டில்  அரச உரை மீதான விவாதத்தில் அமிருடின், மத்திய அரசு கார்ப்பரேட் வரி வருவாயில் ஒரு பகுதியை — சுமார் 5 சதவீதம் தொடங்கி — மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாநிலத்தின் நீண்ட கால நிதி நிலைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவான நிதி கூட்டாட்சி தேவை என்று அவர் வாதிட்டார்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், சிலாங்கூர் நில அடிப்படையிலான வருவாயை என்றென்றும் நம்பியிருக்க முடியாது. நிலம் வரையறுக்கப்பட்டது. அதிக சார்பு மாநிலத்தின் உள்கட்டமைப்பை பராமரிக்கும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் திறனை பலவீனப் படுத்தும்-விதி அடிப்படையிலான வருவாய் பகிர்வை அமிருடினின் கருத்தை எதிரொலித்து, யுனிவெர்சிட்டி டெக்னோலோஜி பெட்ரோனாஸ் (UTP) துணை விரிவுரையாளர் மற்றும் பொருளாதார நிபுணர் சமிருல் அரிஃப் ஓத்மான் கூறுகையில், கார்ப்பரேட் வரி பகிர்வு முன்மொழிவு மாநில நிதியில் நீண்டகால பலவீனத்தை — வரையறுக்கப்பட்ட மற்றும் ஏற்ற இறக்கமான நில அடிப்படை வருவாய் சார்பு — தீர்க்கும்.“மிதமான கார்ப்பரேட் வரி பகிர்வு மாநிலங்களுக்கு வளர்ச்சி இணைக்கப்பட்ட ஸ்திரமான வருவாய் அடிப்படையை அளிக்கும்.

நிலத்தை அதிகமாக பணமாக்கும் அழுத்தத்தை குறைக்கும்” என்று அவர் கூறினார். இது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானது என்றார், எனினும் , மோசமான வடிவமைப்பு எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். பணக்கார, கார்ப்பரேட் அடர்த்தி அதிகம் உள்ள மாநிலங்கள் அதிகம் பயனடைந்தால் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.

மத்திய நிதி நெகிழ்வுத் தன்மையும் குறையும். தேசிய பொருளாதார அதிர்வுகளுக்கு பதிலளிப்பதில் தாக்கங்கள் ஏற்படலாம்  என  சமிருல் எச்சரித்தார்: .ஆகவே செய்ய முடியும், ஆனால் சூத்திர அடிப்படையில், வெளிப்படையான மற்றும் வளர்ச்சி மற்றும் சேவை வழங்கலுடன் இணைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்.

சமிருல் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் சமநிலை அமைப்புகள் தேவை என்று வலியுறுத்தினார். நிதி உள்கட்டமைப்பு மற்றும் மனித மூலதனத்துக்கு செலுத்தப் படுவதை உறுதி செய்ய தெளிவான செலவு விதிகள். யுனிவெர்சிட்டி டெக்னோலோஜி பெட்ரோனாஸ் துணை விரிவுரையாளர் மற்றும் பொருளாதார நிபுணர் சமிருல் அரிஃப் ஒத்மான்.கார்ப்பரேட் வரி பகிர்வு அரசியல் ரீதியில் கடினமாக இருந்தால், அரசு வலுவான சூத்திர அடிப்படையிலான மத்திய மானியங்கள், பரந்த அடிப்படை நுகர்வு வரி பகிர்வு மற்றும் மாநில உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு நிதிகளை பரிசீலிக்கலாம்.

“நோக்கம் மாநிலங்களுக்கு அதிக பணம் கொடுப்பது மட்டும் அல்ல, மிகவும் கணிக்கக் கூடிய, விதி அடிப்படையிலான நிதி” என்றார். வலுவான நிதி கூட்டாட்சி மிகவும் முக்கியமாகி வருகிறது. நில பிரீமியங்களின் அதிக சார்பு குறுகியகால, சொத்து அடிப்படையிலான நிதி நடத்தையை ஊக்குவிக்கிறது. இது முதிர்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கு நிலைத் தன்மை அற்றது. பொருளாதார நிபுணர் ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளை வலுவான உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட, விதி அடிப்படையிலான வருவாய் பகிர்வு மற்றும் சமநிலை அமைப்புகள் துணை தேசிய அரசுகளுக்கு ஒப்பிடக்கூடிய சேவைகளை வழங்க உதவுகின்றன. தேசிய ஒற்றுமையை பேணுகின்றன.“மலேசியா அவற்றை முழுமையாக நகலெடுக்க தேவையில்லை, ஆனால் விருப்பத்தேர்வு இடமாற்றங்களிலிருந்து தெளிவான, விதி அடிப்படையிலான நிதி கூட்டாட்சி கட்டமைப்புக்கு நகர வேண்டும்” என்று சமிருல் கூறினார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.