தெஹ்ரான், ஜன 28- ஈரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பெரும் ஸ்திரமற்ற நிலையை மட்டுமே ஏற்படுத்தும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் (MBS) தொலைபேசி வாயிலாக உரையாடிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்த விவகாரத்தை வலியுறுத்தினார்.
இப்பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் உளவியல் ரீதியான நடவடிக்கைகள் பிராந்திய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என்றும், இதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் பிராந்திய கடற்பரப்பில் நுழைந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது


