லண்டன், ஜன 26- இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை பிரையன் எம்பியூமோ, பேட்ரிக் டோர்கு, மேத்தயூஸ் குன்ஹா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் அஸ்டன் வில்லா, நாட்டிங்காம் போரஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.


