பாரிசான் நேசனல் (BN) லமாக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது,

25 ஜனவரி 2026, 3:55 AM
பாரிசான் நேசனல் (BN) லமாக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது,

கினபாதாங்கான், ஜனவரி 24 — பாரிசான் நேசனல் (BN) தனது வேட்பாளர் மோஹ்ட் இஸ்மாயில் அயோப், வாரிசான் கட்சியின் மஸ்லிவதி அப்துல் மாலேக்கை 5,681 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்ததையடுத்து, லமாக் மாநிலத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது.

இன்று இரவு இங்குள்ள டேவான் ஸ்ரீ லமாக்கில் (Dewan Sri Lamag) அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்தில், இடைத்தேர்தல் அதிகாரி டாக்டர் எட்டி ஸ்யாய்சுல் ரிசாம் அப்துல்லா தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.

மிஹா (Miha) என்று அழைக்கப்படும் மோஹ்ட் இஸ்மாயில், 7,269 வாக்குகள் பெற்றார், அதே நேரத்தில் மஸ்லிவதி 1,588 வாக்குகள் மட்டுமே பெற்றார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி  அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ பங் முக்தார் ராடின் காலமானதை அடுத்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அவருக்கு வயது 66. பங் முக்தார், நவம்பரில் நடைபெற்ற 17வது சபா மாநில தேர்தலின் போது 153 வாக்குகள் பெரும்பான்மையில் லமாக் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்துக் கொண்டார். இதேவேளை, எட்டி ஸ்யாய்சுல் ரிசாம், 160 வாக்குகள் செல்லுபடியாகாத வையாக (spoilt votes) இருப்பதாகக் கூறினார்.

இடைத்தேர்தலில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும், எந்த ஒரு இடையூறும் இன்றி தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

கருப்பு டீ-சட்டை அணிந்த மோஹ்ட் இஸ்மாயில், இரவு 9.55 மணி அளவில் மண்டபத்திற்குள் நுழைய காணப்பட்டது. சபா பாரிசான் துணைத் தலைவர் டத்தோ ஜாப்ரி அரிப்பின் அவருடன் இணைந்தார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.