ஷா ஆலம், ஜன 22 - ஷா ஆலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் குழந்தை பராமரிப்பு மையத்தில், குழந்தைகளிடம் பராமரிப்பாளர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள் தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வப் புகாரும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் நான்கு வீடியோக்கள் வைரலாகி வருவதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டதாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ரம்சே எம்போல் தெரிவித்தார்.
“இதுவரை காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வப் புகாரும் பெறப்படவில்லை. இருப்பினும், விரிவான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லெய்மண்ட் ரெய்னை 014-6907071 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்,” என ரம்சே தெரிவித்தார்.
அந்த காணொளிகளில், ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் உடைகள் அகற்றப்பட்ட நிலையில் (நிர்வாணமாக) ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் பகிரப்பட்டுள்ளது.


