ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்; ஸ்போர்டிங் லிஸ்பனிடம் பிஎஸ்ஜி அதிர்ச்சி தோல்வி

21 ஜனவரி 2026, 3:41 AM
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்; ஸ்போர்டிங் லிஸ்பனிடம் பிஎஸ்ஜி அதிர்ச்சி தோல்வி

லிஸ்பன், ஜனவரி 21 – ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் நடப்பு வெற்றியாளர்களான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG), போர்ச்சுகல் நாட்டின் ஸ்போர்டிங் லிஸ்பன் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் விழுந்த கோல் காரணமாக, பிஎஸ்ஜி அணியின் முதல் 8 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் பிஎஸ்ஜி ஆதிக்கம் செலுத்திய போதிலும், அவர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஸ்போர்டிங் அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் முதல் கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இருப்பினும், 79-வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் இறங்கிய பிஎஸ்ஜியின் கிவிச்சா குவாரட்ஸ்கேலியா அபாரமான ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 90-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து ஸ்போர்டிங் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தத் தோல்வியால், 13 புள்ளிகளுடன் பிஎஸ்ஜி தற்காலிகமாக ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதே வேளையில் ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் அணிகள் பெற்ற வெற்றிகள் பிஎஸ்ஜிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.