ஷா ஆலம், ஜன 19 — நேற்று அம்பாங் ஜெயாவில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாய் மற்றும் தாமான் சாகாவை இணைக்கும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணத்தை அடையாளம் காண ஊராட்சி மன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலைமை குறித்த தெளிவான மதிப்பீட்டைப் பெற அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று தெரத்தாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹவுர் தெரிவித்தார்.
“தற்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த முதற்கட்ட மதிப்பீடுகளை எம்பிஏஜே பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
“அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன்பு மேலும் ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்படும் மண்ணில் பாயும் நீரின் மூலத்தை அடையாளம் காண்பதில் உடனடி கவனம் செலுத்தப்படுவதாக யூ கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் தாமான் மெகாவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, வீடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.




