அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றியது

26 பிப்ரவரி 2026, 3:30 AM
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றியது

அம்பாங் ஜெயா, பிப் 26- இன்று காலை தாமான் அம்பாங் உத்தாமாவில் பொதுப் பாதையை மறித்து விழுந்த மரத்தை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) உடனடியாக வெட்டி அகற்றி தூய்மைப்படுத்தியது.

குடியிருப்பாளர்கள் மற்றும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த உள்ளூர் அதிகாரத் தரப்பு தெரிவித்தது. உள்ளூர்வாசிகளிடமிருந்து புகார் கிடைத்தவுடன், காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அமலாக்கப் பிரிவினரால் இந்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி மன்றம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான மரங்களைக் கையாள்வதில், பாதுகாப்பான மற்றும் இணக்கமான சூழலை உறுதி செய்வதில் தாங்கள் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் அது மேலும் கூறியது. பொதுமக்களின் நலனுக்காக, அபாயகரமான மரங்கள் அல்லது பொதுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை நகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வத் தளங்கள், பொதுப் புகார் மேலாண்மை அமைப்பு அல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லா அழைப்பு எண் வழியாகத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.