மின்சார மோட்டார் சைக்கிள் அருகே முதியவர் சடலமாகக் கண்டெடுப்பு

15 ஜனவரி 2026, 7:00 AM
மின்சார மோட்டார் சைக்கிள் அருகே முதியவர் சடலமாகக் கண்டெடுப்பு

ஷா ஆலம், 15 ஜனவரி: சபாக் பெர்ணம், சுங்கை பெசார், ஜாலான் பாரிட் 4 தீமோர் சாலையோரத்தில் முதியவர் ஒருவர் தனது மின்சார மோட்டார் சைக்கிளுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முன்தினம் இரவு 11.46 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சபாக் பெர்ணம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டென்ட் முகமட் யூசோப் அகமட் தெரிவித்தார்.

"முதற்கட்ட விசாரணையில், 67 வயதான அந்த உள்ளூர் நபர், சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது," என்று அவர் தொடர்பு கொண்டபோது தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் அருகே அவரது மின்சார மோட்டார் சைக்கிளும், அவரது தோள்ப் பையில் பணப்பை மற்றும் கைபேசி போன்ற தனிப்பட்ட பொருட்களும் இருந்ததாக அவர் கூறினார். மேலும், அந்த முதியவரின் உடலில் குற்றச்செயல்கள் நடந்ததற்கான எந்தவித காயங்களும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

"பாதிக்கப்பட்டவரின் இடது கையில் மட்டுமே காயம் இருந்தது, அது அவர் மின்சார மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை இதில் எவ்வித குற்றச்செயல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.