ஷா ஆலம், ஜன 15: நேற்று தாமான் லங்காட் உத்தாமா மற்றும் தாமான் லங்காட் முர்னியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில், பொது இடங்களில் கைவிடப்பட்ட இரண்டு பழுதடைந்த வாகனங்கள் கோலா லங்காட் நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது.
இரு இடங்களிலும் சாலையோரங்களில் காலை 11.50 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது இடங்களின் ஒழுங்கை சீர்குலைக்கும் கைவிடப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எம்பிகேஎல் தெரிவித்துள்ளது.
சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) பிரிவு 46(1)(e)இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,
"சம்பந்தப்பட்ட வாகனங்களை அகற்றி பறிமுதல் செய்யும் அதிகாரம் அதே சட்டப் பிரிவு 46(3)(a) இன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
"இந்த நடவடிக்கையின் மூலம், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


