ஷா ஆலம், ஜன 13: புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய தகவல் பரவல் மையத்தின் (நாடி) ஆலோசனைக் குழு, பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் தெளிவான தகவல்களை வழங்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
மக்களிடையே தவறான புரிதல்களைத் தவிர்க்க, விளக்கங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.
"உதாரணமாக, அரசாங்கத்தின் மானிய மறுசீரமைப்பு, இலக்கு குழுவிற்கு உதவி சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், சில நேரங்களில் உண்மையான தகவல்கள் சென்றடைவதில்லை, மேலும் தவறான புரிதலும் ஏற்பட்டுள்ளது.
"ஆலோசனைக் குழுவிற்கு விளக்கங்களை வழங்குவதில் முதிர்ச்சி இருக்க வேண்டும், இதன் மூலம் தகவல் பொதுமக்களைச் சரியாக சென்றடையும்."
"இருப்பினும், விளக்கங்களை வழங்குவதில், அது மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டியிருக்கலாம் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் தவறான புரிதல்களை கொடுக்காதப்படி சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஷா ஆலம் ஜூப்லி பேராக் மண்டபத்தில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்கான தேசிய தகவல் பரவல் மையத்தின் (நாடி) ஆலோசனைக் குழுவின் தலைவருக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
இதற்கிடையில், சமூகத்திற்கு தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களை வழங்க, ஒரு பிரச்சனை தொடர்பான தகவல்களைப் பெறும் முதல் தரப்பினராக ஆலோசனைக் குழு இருக்க வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
“துல்லியமான தகவல்களை வழங்குவதற்கான பணி ஒரு அமைச்சகத்துடன் மட்டும் நின்றுவிடாது, அவதூறு மற்றும் போலிச் செய்திகளை அடிமட்டம் வரை தடுக்க இந்த முயற்சியை ஒன்றிணைக்க வேண்டும்,” என அவர் கூறினார்.


