ஷா ஆலம், ஜன 12: இணையத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கியதால், திரங்கானுவில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குனர் கிட்டத்தட்ட RM3 மில்லியனை இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 11.06 மணிக்கு கோல திரங்கானு காவல் நிலையத்தில் 66 வயதான பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார் என கோல திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் மூலம் பாதிக்கப்பட்டவர் இணையத்தளத்தில் மேற்கொள்ளும் வணிகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
பின்னர், பாதிக்கப்பட்டவர் வழங்கப்பட்ட இணைப்பில் வணிகத்தைப் பதிவு செய்ததாகவும், முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் 10 முதல் 25 சதவீதம் வரை லாபம் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் அஸ்லி முகமட் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் கடந்த ஆண்டு ஜூன் 10 முதல் நவம்பர் 7 வரை 18 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தினார். அதன் மொத்தம் தொகை RM2,946,799 ஆகும்.
"சமப்ந்தப்பட்ட வணிக பிளாட்ஃபார்மில் இருந்து தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாமல் போன பிறகுதான பாதிக்கப்பட்டவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.
"உடனே, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்தார்," என அஸ்லி முகமட் கூறினார்,
இந்த வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


