சுக்மா 2026: சிலாங்கூர் மின்னியல் விளையாட்டு அணி எட்டு தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு

8 ஜனவரி 2026, 8:03 AM
சுக்மா 2026: சிலாங்கூர் மின்னியல் விளையாட்டு அணி எட்டு தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு

ஷா ஆலாம், ஜனவரி 8: 2026ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) பங்கேற்கவுள்ள சிலாங்கூர் மின்னியல் விளையாட்டுஅணி, இந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இரு ஆண்டு விளையாட்டுப் போட்டியை எதிர்கொள்ள தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மாநில அணி 21 வயதுக்குட்பட்ட சுமார் 40 விளையாட்டு வீரர்களைக் கொண்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டு சுக்மாவில் போட்டியிடவுள்ள அனைத்து மின்னியல் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் என்று 2026ஆம் ஆண்டு சிலாங்கூர் சுக்மா மின்னியல் விளையாட்டு பிரிவின் தலைவர் சைமன் லிம் கூரினார் .

அவரைப் பொறுத்தவரை, வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதால், அணியின் ஏற்பாடுகள் இதுவரை சீராக நடைபெற்று வருவதாக மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மேலும் சிலாங்கூர் பிரிவு இ-கால்பந்து, இ-சிம் ரேசிங், ஸ்ட்ரீட் ஃபைட்டர், இ-செஸ், மொபைல் லெஜெண்ட்ஸ் மற்றும் ஹானர் ஆஃப் கிங்ஸ் (HOK) உள்ளிட்ட பல போட்டிகளில் போட்டியிடும் என்று சிலாங்கூர் Red Giants (SRG) இணை நிறுவனருமான சைமன் தெரிவித்தார். சிலாங்கூர் மின்னியல் விளையாட்டு அணி சுக்மா 2026இல் எட்டு தங்கம் வரை வெல்ல முடியும் என்று தனிப்பட்ட முறையில் நம்பிக்கை தெரிவித்தார். இது சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (MSN) நிர்ணயித்த மூன்று தங்கப் பதக்க இலக்கை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டு சுக்மா சிலாங்கூர் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும். தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக வாகன பந்தய தளத்தில் (SIC) நடைபெறும், அதே நேரத்தில் நிறைவு விழா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (MBPJ) அரங்கிலும் நடைபெறும்.

இந்த முறை 37 வகையான விளையாட்டுகளில் 474 போட்டிகள் இடம்பெறும். இதில் மின்னியல் விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் சிலம்பம் போன்ற ஏழு கூடுதல் விளையாட்டுகளும் அடங்கும். அனைத்து ஒன்பது மாவட்டங்களும், 12 உள்ளூராட்சி மன்றங்களும் போட்டிகளை நடத்தும். முன்னதாக, மாநில அரசு சுக்மா ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக RM100 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. இது போட்டிகள் சீராக நடைபெறுவதையும், பார்வையாளர்களுக்கு வசதியான அனுபவத்தையும் உறுதி செய்யும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.