ஷா ஆலம், ஜன 8: நேற்று கோல சிலாங்கூர் நகராண்மை கழகத்தில் 23 கவுன்சில் உறுப்பினர்கள் எம்பிகேஎஸ் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் 2026-2027 அமர்வுக்கு பதவியேற்றனர்.
நகராண்மை கழகத்திற்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு தொடர்பாளராக கவுன்சில் உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக எம்பிகேஎஸ் தலைவர் முகமட் ஹனாஃப் பாஸ்ரி கூறினார்.
"ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினர்களும் உள்ளூர் சேவைகள் மக்களுக்கு திறம்பட வழங்கப்படுவதை உறுதி செய்வதோடு, முழு அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் பொறுப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மக்கள் நீதிக் கட்சிலிருந்து (KEADILAN) 10 பிரதிநிதிகள், அமனா கட்சியிலிருந்து (AMANAH) ஏழு பேர் மற்றும் டிஏபி கட்சியிலிருந்து (DAP) ஐந்து பேர் என பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை இந்த நியமனம் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
கவுன்சில் உறுப்பினர்களின் நியமனம், கோல சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும், சமூகத்தின் நல்வாழ்வுக்காக கொள்கைகள், முடிவுகள் மற்றும் நிலையான வளர்ச்சி முயற்சிகளை திறம்பட செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


