ஷா ஆலம், ஜன 7: பண்டார் புக்கிட் பூச்சோங் பகுதியில் அனுமதியின்றி பொது வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓர் உணவக வளாகத்தின் வணிக உபகரணங்களைக் சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்.பி.எஸ்.ஜே) பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் அமலாக்க நடைமுறைகளின்படி பதிவு செய்யப்பட்ட பிறகு மேல் நடவடிக்கைக்காக சுபாங் ஜெயாவின் ஜாலான் TP 2, பெரிண்டுஸ்திரியான் UEPஇல் உள்ள எம்.பி.எஸ்.ஜே பறிமுதல் கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எம்.பி.எஸ்.ஜே துணைச் சட்டங்களின் கீழ் உள்ள விதிகளை மீறியதற்காக வளாகத்தின் உரிமையாளருக்கு எதிராக அபராத நோட்டிஸ் (NTK) வெளியிடப்பட்டதாகவும் எம்.பி.எஸ்.ஜே குறிப்பிட்டது.
இதற்கிடையில், எம்.பி.எஸ்.ஜே விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களை அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது வாட்ஸ்அப் மூலம் அமலாக்கத் துறைக்கு 019-220 7823 என்ற எண்ணில் தெரிவிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


