ஷா ஆலம், ஜன 6: துணை அரசு வழக்கறிஞராகக் காட்டிக் கொண்ட மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் RM658,520 இழந்தார்.
சந்தேக நபரால் ஏமாற்றப்பட்ட 68 வயதான பாதிக்கப்பட்டவரிடமிருந்து தனது துறைக்கு புகார் கிடைத்ததாக மாராங் மாவட்ட காவல்துறைத் தலைவர். கண்காணிப்பாளர் முகமட் சோபியான் ரெட்சுவான் தெரிவித்தார்.
"சந்தேக நபர் ஒரு காவல்துறை அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பாதிக்கப்பட்டவர் பணமோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். மறுநாள் துணை அரசு வழக்கறிஞர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்அப் செயலி மூலம் ஒரு நாளைக்கு ஐந்து முறை புகாரளிக்கவும், புதிய வங்கிக் கணக்கைத் திறக்கவும், ஏற்கனவே உள்ள கணக்கிலிருந்து அனைத்து பணத்தையும் விசாரணைக்காக புதிய கணக்கிற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது," என்று ஹரியன் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் டிசம்பர் 14ஆம் தேதி புதிய வங்கிக் கணக்கைத் திறந்துள்ளார் மற்றும் தனது சேமிப்புகளை மாற்றுவது உள்ளிட்ட சந்தேக நபரின் அனைத்து வழிகாட்டியையும் பின்பற்றியுள்ளார் என முகமட் சோபியான் தெரிவித்தார்.
கூடுதலாக, பாதிக்கப்பட்டவர் தனது வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களையும் சந்தேக நபரிடம் வழங்கினார். மேலும், வாட்ஸ்அப் செயலில் உள்ள அனைத்து குறுஞ்செய்திகளையும் நீக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், ஜனவரி 4ஆம் தேதி தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்த பிறகு, ஓய்வூதியதாரர் தான் ஏமாற்றப்பட்டத்தை உணரந்துள்ளார், காரணம் 19 சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.


