ஷா ஆலம், ஜன 6: வணிகம் செய்ய ஆர்வமுள்ள பொதுமக்களை, ஜாலான் DC 4/1, டேசா கோல்ஃபீல்ட்ஸில் உள்ள புதிய வணிக தளத்திற்கு விண்ணப்பிக்க கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்.பி.கே.எஸ்) அழைப்பு விடுத்துள்ளது.
காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரை, மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என மூன்று வணிக நேரங்களுக்கு தலா 30 கடைகள் வழங்கப்படும் என்று (எம்.பி.கே.எஸ்) அறிவித்துள்ளது.
“ஜனவரி 15ஆம் தேதிக்கு முன் https://elesen.mpks.gov.my/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
“இந்த தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே முதல் கட்டமாக பரிசீலிக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிபிடியால் (PBT) ஏற்பாடு செய்யப்பட்ட வணிக தளங்களை தவிர்த்து வேறு இடங்களில் வணிகம் செய்யும் வர்த்தகர்கள் மீது அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்.பி.கே.எஸ் நினைவூட்டியது.
கூடுதல் தகவல்களுக்கு எம்.பி.கே.எஸ் உரிமத் துறையை 03-3289 1439 நீட்டிப்பு 157 அல்லது 111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


