ஷா ஆலம், ஜனவரி 6- அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (MPAJ) மதிப்பீட்டு வரி செலுத்துவோர், 2026ஆம் ஆண்டுக்கான எம்பிஏஜே அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்றால், ஒரு மின்சாரக் காரை (EV) வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் 'Jom Bayar Cukai Taksiran MPAJ' பிரச்சாரத்தின் மூலம் நடத்தப்படுகிறது.
எம்பிஏஜே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் தவணைக்கான முழு ஆண்டு மதிப்பீட்டு வரியைச் செலுத்தி, எந்தவித நிலுவைத் தொகையும் இல்லாதவர்கள் இந்தக் குலுக்கலில் பங்கேற்கலாம். பொது மக்கள்இந்த கட்டணத்தை பிப்ரவரி 28, 2026-க்குள் செலுத்தப்பட வேண்டும்," என்று MPAJ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
iCOMM MPAJ செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்வதன் மூலம் பங்கேற்பை உறுதி செய்யலாம். மின்சாரக் கார் (EV) என்ற பிரதான பரிசைத் தவிர, சலவை இயந்திரம், சுகாதார மசாஜ் நாற்காலி, மோட்டார் சைக்கிள், டிஜிட்டல் கேமரா, மிதிவண்டி, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற பிற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
பங்கேற்பு விதிமுறைகள் மற்றும் பிரச்சாரம் குறித்த மேலதிக தகவல்களை www.mpaj.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.


