ஷா ஆலம், டிசம்பர் 6: ஷா ஆலம் மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் மூத்த குடிமக்கள் வெளிநோயாளர் மற்றும் டயலிசிஸ் சிகிச்சை பெறுவதற்காக இலவச சமூக வாகன சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) இந்தச் சேவை மாற்றுத்திறனாளி அட்டை வைத்திருப்பவர்கள் அல்லது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. "எம்பிஎஸ்ஏ சமூக வாகன சேவை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்," என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
வழங்கப்படும் இடமாற்ற நிலையங்களில் செக்சன் 7 சுகாதார கிளினிக், செக்சன் 19 சுகாதார கிளினிக், புக்கிட் குடா கிள்ளான் சுகாதார கிளினிக், சுங்கை பூலோ சுகாதார கிளினிக், ஷா ஆலம் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் ஆகியவை அடங்கும்.
2024 முதல், எம்பிஎஸ்ஏ மேலும் சில இடமாற்ற நிலையங்களைச் சேர்த்துள்ளது. அவற்றில் KPJ சிலாங்கூர் ஸ்பெஷலிஸ்ட் செக்சன் 20, அவிசேனா மருத்துவமனை செக்சன் 14, MSU மருத்துவ மையம் செக்சன் 13, ஆரா டாமன்சாரா மருத்துவ மையம் செக்சன் U2, கொலம்பியா ஆசியா மருத்துவமனை புக்கிட் ரிமாவ் ஆகியவை அடங்கும்.
மேலும், ஐமான் டயாலிசிஸ் மையம், செக்சன் 15, நெர்ஃப்கேர் ஹீமோடயாலிசிஸ், சுங்கை பூலோ, அன்-நூர் டயாலிசிஸ் மையம், செக்சன் 13, அல்-எஹ்சான் டயாலிசிஸ் மையம், செக்சன் 7, பெர்தாமா சுபாங் டயாலிசிஸ் மையம், செக்சன் U5, பஹியா டயாலிசிஸ் மையம், MAIS டயாலிசிஸ் மையம், செக்சன் 3, ரக்யாட் டயாலிசிஸ் மையம் மற்றும் டாமன்சாரா பிரீமியர் டயாலிசிஸ் மையம், செக்சன் U13 ஆகியவை பிற இடமாற்ற நிலையங்களாகும்.
மேல் தகவல்களை பெற எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டுத் துறையை 03-5522 2732 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.


