பான் கோன் சிலாங்கூர் எஃப்சி தலைமை பயிற்சியாளராகவும், கேமல் தொழில்நுட்ப இயக்குநராகவும் நியமனம்

6 ஜனவரி 2026, 2:03 AM
பான் கோன் சிலாங்கூர் எஃப்சி தலைமை பயிற்சியாளராகவும், கேமல் தொழில்நுட்ப இயக்குநராகவும் நியமனம்

ஷா ஆலம், ஜனவரி 6: சிலாங்கூர் எஃப்சி, தேசிய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிம் பான் கோன், இன்று முதல் Gergasi Merah அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் எஃப்சி, இடைக்காலப் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கேமல், அணியின் நீண்டகால திட்டமிடலை வலுப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்தது.

கிம் பான் கோன், Gergasi Merah அணியின் முதன்மைப் படையின் செயல்திறனை வெற்றிகரமாக வழிநடத்தி, அணி மிக உயர்ந்த மட்டத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வார் என்று கழகம் நம்புகிறது. "மேலும் சிலாங்கூர் எஃப்சியின் தொழில்நுட்ப இயக்குநராக கேமலின் பங்கு, குறிப்பாக 23 வயதுக்குட்பட்ட அணி மற்றும் கழகத்தின் அடித்தள மட்ட வீரர்களுக்கான பயிற்சி அமைப்பு மற்றும் இளம் வீரர்களின் மேம்பாட்டில் முழு கவனம் செலுத்தும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

பான் கோன், 2022 முதல் 2023 வரை ஹரிமாவ் மலாயா அணியைப் பயிற்றுவித்துள்ளார். இதில் அனைத்துலக அளவில் பல நேர்மறையான முடிவுகளை அணி பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்தப் பயிற்சியாளர், இதற்கு முன் கே-லீக் ஜாம்பவான் கிளப்பான உல்சான் ஹூண்டாயை வழிநடத்தியுள்ளார். இதன் மூலம் ஆசிய கால்பந்து அரங்கில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.