கோலாலம்பூர், ஜன 2-நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாகப் பன்முகத்தன்மையில் நல்லிணக்கம் நிலைத்திருப்பதையும், மக்களின் நலனுக்காகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் செயல்படும்.
முகநூலில் பகிரப்பட்ட பதிவின் மூலம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மடாணி அரசாங்கம் இந்த ஆண்டில் புதிய நம்பிக்கைகளை வரவேற்கும் வகையில் மக்களுடன் இணைந்து முழு நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும் என்று தெரிவித்தார்.
"இதுவே மலேசியாவிற்கான மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும். புத்தாண்டு வாழ்த்துகள்!" என்று அவர் கூறினார்.




